அனைத்துக் கட்சிக் கூட்டம்

அனைத்துக் கட்சிக் கூட்டம்
மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுன்கரா அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.இதில் திமுக,அதிமுக, பாஜக,ஆம் ஆத்மி,காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் வாக்காளர்கள் மத்தியில் 1951ம் ஆண்டு சட்டபிரிவின் கீழ் எந்த கட்சி வேட்பாளர்களும் வாக்காளர்கள் இடையே சாதி,மதம்,இனம் தூண்டும் அடிப்படையில் பிரச்சாரம் செய்யக்கூடாது, எந்த மத வழிபாட்டு தலங்களில் பிரச்சாரம் செய்யக்கூடாது, வேட்பாளர்கள் நடத்தக்கூடிய கூட்டம் போன்றவற்றின் நேரம் முன்கூட்டியே தேர்தல் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும், பிரச்சாரம் தனிநபர் தாக்குதல் குறித்து இருக்க கூடாது,இரவு 10முதல் அதிகாலை 6மணி வரை ஒலிப்பெருக்கி பயன்படுத்தகூடாது ,10ஆயிரம் ரூபாய் மதிப்பிலால பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி இல்லை, குழந்தைகளை கண்டிப்பாக பிரச்சாரம் செய்ய ஈடுபடுத்தக்கூடாது, சுவர் விளம்பரம் நீக்க வில்லை என்றால் எந்த அரசியல் கட்சி சுவர் விளம்பரம் உள்ளதோ அதனை அந்த கட்சி வேட்பாளர் செலவில் சேர்க்கப்படும், ஒற்றைச்சாரள முறையில் வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஆன்லைன் மூலம் வேட்பாளர்கள் தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெற்று கொள்ளலாம் போன்ற விதிமுறைகளை போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டும் இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜகோபால் சுன்கரா இந்த கூட்டத்தில் முக்கியமான தேர்தல் நடத்தை விதிமுறைகளை அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டும் அறிவுரைகள் வழங்கி உள்ளோம், வேட்பாளர்கள் குற்ற வழக்கு பின்னனி இருந்தால் தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கையில் மூன்று முறை விளம்பரம் கொடுக்க வேண்டும், முன்னாள் எம்எல்ஏ எம்பியாக இருந்தால் தவணைத்தொகை இல்லா சான்றிதழ் வழங்க வேண்டும், 10ம் தேதி வேட்புமனு போது மூன்று வாகனங்களும்,வேட்பாளர் உடன் நான்கு பேர் மட்டுமே வர அனுமதி,கடந்த இடைத்தேர்தலில் மூன்று வேட்பாளர்கள் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வெளிவந்தவுடன் 30நாட்களில் வரவு செலவு குறித்து கணக்கு தாக்கல் செய்யாததால் இந்த முறை போட்டியிட முடியாது என்றும்பொங்கல் பண்டிகை உள்ளிட்ட அரசு விடுமுறை காரணமாக வேட்புமனு தாக்கல் செய்ய மூன்று நாட்கள் உள்ளதால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என அரசியல் கட்சி அமைப்பினர் வழங்கிய மனு எவ்வித நடவடிக்கையும் எங்களால் எடுக்க முடியாது மனுவை தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்...
Next Story