மருத்துவ மதிப்பீட்டு முகாம் துவக்கம்

மருத்துவ மதிப்பீட்டு முகாம் துவக்கம்
துவக்கம்
மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமினை கலெக்டர் துவக்கி வைத்தார். கள்ளக்குறிச்சி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறையின் சார்பில் 0-18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது. கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நடந்த முகாமினை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார். முகாமில் தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.இம்முகாம் சின்னசேலம் ஒன்றியத்திலும் இன்று(8 ம் தேதி), சங்கராபுரம் ஒன்றியத்தில் வரும் 10 ம் தேதி, ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் வரும் 21 ம் தேதி, திருக்கோவிலுார் ஒன்றியத்தில் வரும் 22ம் தேதி, உளுந்துார்பேட்டை ஒன்றியத்தில் வரும் 24 ம் தேதி, திருநாவலுார் ஒன்றியத்தில் வரும் 28 ம் தேதி, கல்வராயன்மலை ஒன்றியத்தில் வரும் 29ம் தேதி, தியாகதுருகம் ஒன்றியத்தில் வரும் 31 ம் தேதி நடக்கிறது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து தகுதியின் அடிப்படையில் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
Next Story