பொங்கல் பரிசு வழங்கும் பணி தொடக்கம்.

மதுரையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் வழங்கினார்.
தமிழகத்தில் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பான ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி ,ஒரு முழு கரும்பு ஆகியவை கொண்ட தொகுப்பை பொங்கல் பரிசாக தமிழக அரசு அறிவித்தது. சென்னையில் இன்று ( ஜன.9) நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பொங்கல் பரிசு தொகுப்பை கொடுத்து தொடங்கி வைத்தார். அதனடிப்படையில் இன்று (ஜன.9) ஒத்தக்கடையில் உள்ள நியாய விலைக் கடையில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை மக்களுக்கு பொதுமக்களுக்கு வழங்கினார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள், உயர் அதிகாரிகள் பலர் இருந்தனர்.
Next Story