கல்லுாரியில் தொழில் முனைவோர் பயிலரங்கம்

கல்லுாரியில் தொழில் முனைவோர் பயிலரங்கம்
பயிலரங்கம்
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த பயிலரங்கத்திற்கு கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான்விக்டர் வாழ்த்துரை வழங்கினார். வணிகவியல் துறையின் தலைவர் அகமதுசுல்தான் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கள்ளக்குறிச்சி தொழில் முனைவோர் புத்தாக்க நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அறிவொளி பங்கேற்று, தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள், திட்டங்கள், பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து மாணவர்களிடம் விளக்கி கூறினார். இதில், கல்லுாரி பேராசிரியர்கள் பிந்து, கோமதி, ரோஷினி, ஐஸ்வர்யா, பிரகாஷ், அனந்தராமன், வெங்கடேசன், அன்பரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கணினி அறிவியல் துறையின் தலைவர் சக்திவேல் நன்றி கூறினார்.
Next Story