பள்ளியில் போக்சோ விழிப்புணர்வு முகாம்

பள்ளியில் போக்சோ விழிப்புணர்வு முகாம்
முகாம்
சங்கராபுரம் அடுத்த பாச்சேரி பள்ளியில் போக்சோ விழிப்புணர்வு முகாம் நடந்தது. சங்கராபுரம் வட்டம் கல்வராயன்மலை பகுதியை சேர்ந்த பாச்சேரி கிராமத்தில் உள்ள கஸ்துார்பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட பள்ளியில் போக்சோ விழிப்புணர்வு முகாம் நடந்தது. பள்ளி ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். கருத்தாளர்களாக சங்கராபுரம் காவல் நிலைய தலைமைக் காவலர் சக்தி, காவலர் சக்திகுமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள்இளவரசி, கண்ணம்மா,ஜெயந்தி ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story