அண்ணா தொழிற்சங்க ஆலோசனை கூட்டம்

அண்ணா தொழிற்சங்க ஆலோசனை கூட்டம்
கூட்டம்
கள்ளக்குறிச்சி சண்முகா மகாலில் அ.தி.மு.க., மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் எம்.பி., காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பிரபு, அழகுவேலுபாபு, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல் முன்னிலை வகித்தனர்.அண்ணா தொழிற்சங்க நகர செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில அண்ணா தொழிற்சங்க செயலாளர் கமலகண்ணன், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு பங்கேற்று, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளின் கடமை குறித்தும், 2026 சட்டசபை தேர்தலையொட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் பேசினர். நகர செயலாளர் பாபு, கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன் உட்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி தெற்கு அண்ணா தொழிற்சங்க செயலாளர் கீர்த்திநாராயணன் நன்றி கூறினார்.
Next Story