மண்டல அளவிலான மேசை பந்து போட்டி

மண்டல அளவிலான மேசை பந்து போட்டி
போட்டி
கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மண்டல அளவிலான மேசை பந்து போட்டி நடந்தது.கள்ளக்குறிச்சியில் நடந்த போட்டிக்கு கல்லுாரி முதல்வர் முனியன் தலைமை தாங்கினார். மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ஜோதிபிரியா, இளவரசி முன்னிலை வகித்தனர். அண்ணாமலை பல்கலைகழகத்திற்குட்பட்ட கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் உட்பட 4 மாவட்டங்களில் உள்ள 8 கல்லுாரிகளை சேர்ந்த மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். இதில், கடலுார் சென்ட் ஜோசப் கல்லுாரி மாணவிகள் முதல் இடத்தை பிடித்தனர். அதேபோல், கடலுார் பெரியார் அரசு கலைக்கல்லுாரி மாணவிகள் இரண்டாமிடத்தையும், மயிலாடுதுறை தர்புரம் ஞானாம்பிகை அரசு கலைக்கல்லுாரி மாணவிகள் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். தொடர்ந்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், வணிகவியல் துறை துணைத்தலைவர் வீரலட்சுமி, நுாலகர் அசோக்குமார், உடற்கல்வி இயக்குனர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story