பொங்கல் விழா

மகா மாரியம்மன் கோயில் பொங்கல் விழா
ஈரோடு நாராயணவலசில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் திருவிழா கடந்த மாதம் 31-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அன்று இரவு கம்பம் நடப்பட்டது. தினமும் கம்பத்துக்கு பெண்கள் புனிதநீர் ஊற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர்.நேற்று காலை பொங்கல் விழா நடந்தது. இதில் கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டனர். விழாவையொட்டி மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு கம்பம் பிடுங்கப்படுகிறது.
Next Story