பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணியை துவங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

செம்மாண்ட குப்பம் குப்பம் நியாயவிலைக் கடையில் இன்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொங்கல் பரிசு வழங்கும் பணி துவக்கம்
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி, ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள 1096 நியாய விலை கடைகளில் உள்ள 4,71 058 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை இன்று காலை தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி ஆகியோர் இணைந்து செம்மாண்ட குப்பம் நியாய விலை கடையில் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், கோட்டாட்சியர் காயத்ரி கூட்டுறவு இணைப்பதிவாளர் சரவணன் ஒன்றிய கழக செயலாளர் சக்திவேல் பிரபு ராஜசேகர் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் நிலவழகன், சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story