சங்கரன்கோவிலில் மின்சார சிக்கன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மாபெரும் மின்சார விழிப்புணர்வு கருத்தரங்கம் சங்கரன்கோவில் கோட்ட மின் பணியாளர்கள் மற்றும் மாஸ்டர்வீவர்ஸ் அசோசியேசன் ஏற்பாட்டில் நடைபெற்றது.மின்வாரிய ஜீப் வாகனத்தில் மின்சார சிக்கன விழிப்புணர்வு ஒலிபெருக்கி பிரச்சாரம் செய்யப்பட்டது, மின்சார சிக்கன விழிப்புணர்வு கருத்தரங்கில் செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பழனிச்செல்வம், கணக்கு அதிகாரி லட்சுமி, உதவி செயற்பொறியாளர் நகர் புபேஸ் ராஜ்மோகன்,கிராமபுறம் தங்கராஜ், கலிங்கப்பட்டி முஜிபுர் ரகுமான், மின்சார சிக்கனத்தின் அவசியம் பற்றிய விளக்கங்களை எடுத்துக் கூறினர் இளநிலை பொறியாளர்கள் பால்ராஜ், கணேச இராமகிருஷ்ணன், செந்தில் முருகன்,கீதா, அம்சவேணி, தங்ககனி வேலாயுதம், முருகேசன், ஜெபஸ்டின், தொமுச மகராசன், சரவணமுருகையா,பண்டக மேற்பார்வையாள் நடராஜன் மற்றும் வருவாய் பிரிவு பணியாளர்கள், களப்பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் அரசு ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
Next Story

