ராமநாதபுரம் பொதுமக்கள் பேருந்து வழித்தடங்கள் அமைத்ததற்கு அமைச்சருக்கு நன்றி

முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொக்கனாரேந்தல் கிராமத்திற்கு பரமக்குடியில் இருந்து முத்துசெல்லபுரம் வரை பேருந்து இயக்கம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு பால்வளத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் R.S. ராஜகண்ணப்பன் அவர்களுடைய உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொக்கனாரேந்தல் கிராமத்திற்கு பரமக்குடியில் இருந்து முத்துசெல்லபுரம் வரை சென்று வந்த அரசு பேருந்தை உலையூர் வழியாக பொக்கனாரேந்தல் கிராமத்திற்கு வரை நீட்டித்து பள்ளி , கல்லூரி இருக்கும் பரமக்குடிக்கு மாணவ மாணவிகளை ஏற்றி செல்வதற்காக பேருந்து சேவையை துவக்கி வைத்தனர்.
Next Story