மாடப்பள்ளியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

மாடப்பள்ளியில் ஆட்சியர் பொங்கல் தொகுப்பினை அட்டை தாரர்களுக்கு வழங்கினார்
திருப்பத்தூர் மாவட்டம் தமிழர் திருநாளான தைப்பொங்கலை கொண்டாடும் விதமாக, பொங்கல் பரிசு தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ்மாடப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி துவக்கி வைத்தார். திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாயவிலை கடையில் குடும்ப அட்டை தாரகளுக்கு பொங்கல் தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் தர்ப்பக ராஜ் வழங்கி துவக்கி வைத்தார் இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 601 நியாய விலை கடைகளில் 3,33,062 குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஏற்கனவே டோக்கன் வழங்கி எந்தெந்த நாள்களில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றார் போல் அனைவருக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதில் குறிப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சக்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் இலவச வேட்டி, சேலை ஆகியனவை தொகுப்பாக வழங்கப்படுகின்றன. இதில் குறிப்பாக 33,945 கரும்புகள் மட்டும் திருப்பத்தூர் மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 2,99,117 கரும்புகள் வெளி மாவட்டமான கடலூர் மாவட்டத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து நியாய விலை கடைகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் (13.01.2025) தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வினில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலகிருஷ்ணன், திருப்பத்தூர் ஒன்றியக் குழு தலைவர் விஜயா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சாந்தி மற்றும் உள்ளாட்சித் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Next Story