பொங்கல் தொகுப்பை வாங்க மறுத்த மக்கள்.

மதுரை மேலூர் அருகே கிராம மக்கள் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பை வாங்க மறுத்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ஒன்றிய அரசு முற்றிலும் ரத்து செய்யும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என மேலூரை சுற்றியுள்ள அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டி, நரசிங்கம்பட்டி உட்பட்ட பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜன.9) தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பினை தங்களுக்கு வேண்டாம் என நரசிங்கம்பட்டி மற்றும் அரிட்டாபட்டி மக்கள் நேரடியாக வந்து ரேஷன் கடைகளில் தெரிவித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story