கோவை: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா !

கோவை: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா !
கோவையில் இன்று முதல் பொங்கல் தொகுப்பு விநியோகம்
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் களை கட்டியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா கோலாகலமாக துவங்கியது. கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை வடவள்ளி வி.என்.ஆர் நகர் ரேஷன் கடையில் நேரில் சென்று, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் இலவச வேட்டி, சேலை ஆகியவை வழங்கப்படுகின்றன.கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த திட்டத்தால் கோவை மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story