நாவல் நகர் அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து.நான்கு பேர் காயம்.

நாவல் நகர் அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து.நான்கு பேர் காயம்.
நாவல் நகர் அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து.நான்கு பேர் காயம். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு, ரெட்டிபாளையம், ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் வயது 31. லாரி டிரைவர். இவர் ஜனவரி 7ஆம் தேதி அதிகாலை 3-மணி அளவில், கரூர்- சேலம் சாலையில் அவரது லாரியை ஓட்டி வந்தார். இவரது வாகனம் வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாவல் நகர், ஷாலினி டீக்கடை அருகே வந்தபோது, அதே சாலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மோகன்லால் வயது 44 என்பவர் வேகமாக ஓட்டி வந்த ஆம்னி பேருந்து அருண்குமார் ஓட்டிச் சென்ற லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்து டிரைவர் மோகன்லால், ஆம்னி பேருந்தில் பயணித்த ராஜஸ்தானை சேர்ந்த இரண்டு பெண்கள், ஒரு ஆண் என மொத்தம் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரையும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர் அருண்குமார் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் ஆம்னி பேருந்தை வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய மோகன்லால் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வாங்கல் காவல்துறையினர்.
Next Story