பறக்கும் படையினருக்கு பயிற்சி

பறக்கும் படையினருக்கு பயிற்சி
தேர்தல் பறக்கும் படையினருக்கு பயிற்சி
பறக்கும் படையினருக்கு வாகன சோதனையின் போது, பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகள் குறித்து, தேர்தல் பறக்கும் படையினருக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. ஈரோடு மாநகராட்சி அலுவலக கூட்டரங்களில் நடந்த இந்த பயிற்சி வகுப்பிற்கு, தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான மனிஷ் தலைமை வகித்தார். இதில், வாக்குப்பதிவு நேரங்களில் பிரச்சனைகள் ஏற்படாத வகையில் பறக்கும் படையினர் பணியில் ஈடுபட வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.தேர்தலையொட்டி, அனுமதியின்றி பணம் கொண்டு செல்வது, பரிசு பொருட்கள் கொண்டு செல்வது உள்ளிட்டவைகளை தடுப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது. மேலும், வாகனங்களை சோதனை செய்யும்போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், பறிமுதல் செய்யும் பொருட்களை கையாளும் விதம் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.வகுப்பில், நிலையான கண்காணிப்புக் குழு, தேர்தல் பறக்கும் படையில் உள்ள வருவாய் அதிகாரிகள், போலீசார், வீடியோ கிராபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story