சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி கார் மோதி பலி
Thanjavur King 24x7 |9 Jan 2025 8:11 AM GMT
விபத்து
தஞ்சாவூரில் புதன்கிழமை சாலையைக் கடக்க முயன்றபோது, காா் மோதியதில் பலத்த காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கணபதி அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் கலியபெருமாள் மனைவி கனகாம்பரம் (70). இவா், புதன்கிழமை காலை அரசு மருத்துவமனையில் மாத்திரைகள் வாங்குவதற்காக தஞ்சாவூருக்கு வந்தாா். தஞ்சாவூா் காந்திஜி சாலையில் சாலையைக் கடக்க முயன்ற இவா் மீது பழைய பேருந்து நிலையத்திலிருந்து ரயிலடி நோக்கி சென்று கொண்டிருந்த காா் மோதியது. இதனால், பலத்த காயமடைந்த கனகாம்பரம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
Next Story