தாராபுரம் விவேகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் விவேகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை இன்று விளையாட்டு விழா நடைபெற்றது.
தாராபுரம் விவேகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா  பள்ளியில் பேண்டு வாத்தியக்குழு, என்.சி.சி தரைப்படை, விமானப்படை, கப்பற்படை, சாரணர்படை, சாலை பாதுகாப்பு மாணவர் படை, செஞ்சிலுவை சங்கம், தேசிய பசுமைப்படை, சேம்பியன்ஸ், ஐகான்ஸ், லெஜண்ட்ஸ் மற்றும் வாரியர்ஸ் மாணவ அணியினர் அணிவகுப்பு நடத்தினர். இவ்விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக தாராபுரம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மாணவர்களின் ஏற்றுக்கொண்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றினார். அணிவகுப்பு மரியாதையை செலுத்தினர். இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 100 மீ, 800 மீ, 4 × 100 மீ தொடர் ஓட்டப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுரேஷ்குமார் பரிசளித்துப் பாராட்டினார். இசைக்குழு மாணவர்களின் இசை நிகழ்ச்சி, பிரைமரி குழந்தைகளின் காவடியாட்டம், கும்மியாட்டம், பட்டாம்பூச்சி நடனம், கிளாப் நடனம், படுகா நடனம், புலியாட்டம், மிலிட்டரி நடனம், பந்து நடனம், க்ளௌன் நடனம் மற்றும் கோமாளி நடனம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் சுப்ரமணியன், செயலாளர் பூபதி, அறக்கட்டளை உறுப்பினர்கள் கனகராஜ், நடராஜன், விஜயகுமார், முதல்வர் அல்லிராணி உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.
Next Story