பெரியாரை அவதூறாக பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து திருச்செங்கோடு நகர காவல் துறையில் புகார்
Tiruchengode King 24x7 |9 Jan 2025 9:39 AM GMT
பெரியாரை அவதூறாக பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து திருச்செங்கோடு நகர காவல் துறையில் புகார்
நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசி உள்ளார் இது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் திராவிடர் கழகத்தின் சார்பாக நகர செயலாளர் மோகன் திருச்செங்கோடு திமுக ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல் ஆகியோர் தலைமையில் தி.க மற்றும் திமுகவினர் புகார் மனு அளித்தனர் புகார் மனுவை திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளர் திவ்யா பெற்றுக் கொண்டார் இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக ஒன்றிய செயலாளர் தங்கவேல் கூறும் போது தமிழர்களின் தலைவராக விளங்கக்கூடிய பெரியார் குறித்து அவதூறு கூறும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வருகிறார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சீமானை கண்டித்தும் திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளோம் என்று கூறினார் இவரைத் தொடர்ந்து திராவிடர் கழக நகர செயலாளர் மோகன் கூறும் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் உண்மைக்கு புறம்பாக பெரியார் கூறாத கருத்துக்களை அவர் கூறியதாக சொல்லி வருகிறார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவர் மீது வழக்கு தொடர வலியுறுத்தியும் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம் இங்கு உள்ள காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர் இதே நிலை தொடர்ந்தால் தமிழக மக்களே சீமானை கல் மற்றும் செருப்பு கொண்டு அடிக்க தயங்க மாட்டார்கள் என்று கூறினார் இந்த புகார் கொடுக்கும் நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தினர் திமுகவினர் பலரும் கலந்து கொண்டனர்
Next Story