சித்தலவாய் பேருந்து நிறுத்தம் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் இருவர் படுகாயம்.

சித்தலவாய் பேருந்து நிறுத்தம் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் இருவர் படுகாயம்.
சித்தலவாய் பேருந்து நிறுத்தம் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் இருவர் படுகாயம். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, சித்தலவாய் அருகே உள்ள நந்தன் கோட்டை காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாபு வயது 51. இவரது மாமா அதே பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் வயது 60. திருச்சி மாவட்டம், முசிறி, திருமுருகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் வயது 55. ஜனவரி 7ஆம் தேதி மாலை 6:30 மணி அளவில், ஜேம்ஸ் தனது டூவீலரில் கரூர்- திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் சித்தலவாய் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத சிகப்பு கலர் கார் ஒன்று வேகமாக சென்று ஜேம்ஸ் ஓட்டிய டூவீலரின் பின்னால் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. அப்போது ஜேம்ஸ்க்கு முன்பாக மகாலிங்கம் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் மீது ஜேம்ஸ் ஓட்டிச் சென்ற டூவீலர் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்து நடைபெற்ற இந்த விபத்தில் மகாலிங்கம் மற்றும் ஜேம்ஸ் ஆகிய இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரையும் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக பாபு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்ற அந்த கார் எது? அந்த காரின் ஓட்டுநர் யார்? என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் லாலாபேட்டை காவல்துறையினர்.
Next Story