மின்வாரிய அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
Dindigul King 24x7 |9 Jan 2025 9:50 AM GMT
திண்டுக்கல்: மின்வாரிய அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.5 லட்சம் கொள்ளை
திண்டுக்கல் ஆர்.எம். காலனி 8வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஹரி பிரசாத். இவர், திண்டுக்கல் மின்வாரியத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார். வாடகை வீட்டில் வசித்து வரும் இவர், நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார். இதையடுத்து நேற்றிரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோவில் இருந்த ரூ.1.50 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஹரி பிரசாத், திண்டுக்கல் மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வினோதா, எஸ்.ஐ. மலைச்சாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் திருட்டு சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளிகள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story