தர்மபுரியில் வண்ண கோலப்பொடி தயாரிக்கும் பணி தீவிரம்

தர்மபுரியில் பொங்கலுக்கு கோலமிட பயன்படுத்தப்படும் வண்ணக் கோலப்பொடிகள் தயாரிக்கும் மற்றும் ஏற்றுமதி செய்யும் பணி தீவிரம்
மார்கழி மாதம் மற்றும் தைப்பொங்கள் அன்று அதிகாலையில் பெண்கள் வீட்டு வாசலில் பல வண்ண கோலப்பொடிகளை கொண்டு விதவிதமாக வண்ண கோலமிடுவது வழக்கம், இந்நிலையில் மார்கழி மற்றும் பொங்கலையொட்டி தருமபுரியில் பல வண்ணங்களில் கோலப்பொடிகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தருமபுரி, பழைய தருமபுரி ஏ. கொள்ள அள்ளி, குண்டல் பட்டி, சவுலூர் உள்ளிட்ட இடங்களில் குடிசை தொழிலாக 50க்கும் மேற்பட்டோர் அரவை ஆலைகளில் பச்சை, மஞ்சள், சிவப்பு, நீலம், ஆரஞ்சு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வண்ணங்களில் மரவள்ளிகிழங்கு மாவு மூலம் கோலப்பொடிகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் தருமபுரியில் தயாராகும் வண்ண கோலப்பொடிகள் உள்ளூர் சந்தைகளிலும் பெங்களூர், சேலம், கோவை, ஒசூர், திருப்பதி போன்ற பல்வேறு ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 10 டன் வரை கலர் பொடிகள் தயாரிப்பதாகவும் பொங்கள் பண்டிகை நெருங்கிவருவதையொட்டி பல வண்ணங்களில் கோலப்பொடிகள் தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story