திருப்பத்தூர் அருகே பூட்டை உடைத்து பணம் நகை கொள்ளை!
Tirupathur King 24x7 |9 Jan 2025 10:39 AM GMT
திருப்பத்தூர் அருகே பூட்டை உடைத்து பணம் நகை கொள்ளை!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே வீட்டில் புகுந்து ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை சராசரியாக தாக்கி அவருடைய மனைவியின் கழுத்தில் இருந்த ஒன்றரை பவன் நகை பறிப்பு! பணம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை! தனியாக இருக்கும் முதியவர்களை குறிவைக்கும் கும்பல்* திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தாதனவலசை கிராமத்தைச் சார்ந்த பழனிசாமி (82) ஓய்வு பெற்ற அரசு தலைமை ஆசிரியர் இவருடைய மனைவி பாப்பாத்தி அம்மாள் (70) இருவரும் நிலத்தில் வீடு கட்டி தனிமையாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு முக கவசம் அணிந்த மர்ம நபர்கள் நான்கு பேர் வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர். கதவை திறந்தவுடன் வீட்டின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பழனிசாமியை சராசரியாக தாக்கி தலையணையை முகத்தின் மீது வைத்து கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த அவருடைய மனைவி பாப்பாத்தி அம்மாள் கத்தி கூச்சலிட்டுள்ளார் இதனால் அவரையும் தாக்கி அவரிடமிருந்து ஒன்றரை சவரன் தங்க நகையை பறித்துள்ளனர் மேலும் பீரோவில் இருந்த 7000 பணம் மற்றும் பட்டன் செல்போன்களையும் திருடி சென்றுள்ளனர். அதன் பின்பு இருவரையும் வீட்டின் உள்ளே வைத்து வெளிப்பக்கமாக பூட்டி விட்டு மர்ம கும்பல் தப்பித்து சென்றுள்ளன. இந்த நிலையில் இன்று காலை பழனிச்சாமியின் மகன் சரவணன் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது தாய் தந்தை இருவரும் காயம் அடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ஷ்ட அடைந்தார். மேலும் இருவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார் மேலும் இந்த சம்பவ குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசாரிடம் புகார் அளித்தார். மேலும் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வீட்டில் தனியாக வசித்து வரும் முதியவர்களை குறிவைத்து வீட்டில் புகுந்து தாக்கியும் கொள்ளை சம்பவம் அரங்கேறி வருகிறது இதனை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது…
Next Story