கிராம மக்கள் அடையாள அட்டைகளை ஒப்படைக்க முயன்றதால் பரபரப்பு

கிராம மக்கள் அடையாள அட்டைகளை ஒப்படைக்க முயன்றதால் பரபரப்பு
வேலன் புதுக்குளத்தில் உள்ள கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் அடையாள அட்டைகளை ஒப்படைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலன் புதுக்குளத்தில் உள்ள கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் அடையாள அட்டைகளை ஒப்படைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே வேலன் புதுக்குளத்தில் கிருஷ்ணா ப்ளூ மெட்டல்ஸ் என்ற கல்குவாரி அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "எங்கள் பகுதியில் 200 குடியிருப்பு உள்ளது. முழுமையாக விவசாயம், ஆடு, மாடு வளர்த்து வருகிறோம். கிராமம் அருகே கல்குவாரியில் வெடி வைப்பதால் கிராமமே அதிர்ந்து வருகிறது. ஆகையினால் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அச்சம் அடைந்துள்ளனர்.‌ மேலும் கனரக வாகனம் தாங்கள் பகுதியில் வேகமாக வருவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையினால் தங்கள் பகுதியில் கல்குவாரி அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். மேலும் எங்களது அடையாள அட்டைகளை ஒப்படைக்க முடிவு செய்து போராட்டம் நடத்தினோம். தற்போது டிஎஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தபோது இனிமேல் இது தொடர்பாக மனு அளித்தால் அனைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று காவல்துறையினர் கூறுகி்னறனர். எனவே கல்குவாரியை தடை செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கிராம மக்கள் வாக்காளர் அடையாள அட்டையை ஆட்சியரிடம் ஒப்படைப்பு செய்யும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியரை சந்திக்க சென்ற போது, வாக்காளர் அட்டை வைத்து இருந்தவர் வெளியில் தடுத்து நிறுத்தப்பட்டார். ஆட்சியரை சந்தித்த மக்கள் வெளியில் வந்த பிறகு, அவர்கள் வாக்காளர் அடையாள அட்டையை ஆட்சியரை அறையின் அருகே வராண்டாவில் வைத்து விட்டு வெளியில் வந்து உள்ளனர். இதனால் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Next Story