திருப்பத்தூரில் யார் அந்த சார் என வாசக ஸ்டிக்கரை இருசக்கர வாகனங்களில் முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி ஒட்டி கோஷம் எழுப்பினார்.
Tirupathur King 24x7 |9 Jan 2025 12:14 PM GMT
திருப்பத்தூரில் யார் அந்த சார் என வாசக ஸ்டிக்கரை இருசக்கர வாகனங்களில் முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி ஒட்டி கோஷம் எழுப்பினார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் யார் அந்த சார் என வாசக ஸ்டிக்கரை இருசக்கர வாகனங்களில் முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி ஒட்டி கோஷம் எழுப்பினார். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேரூந்து நிலையம் அருகில் அண்ணா பல்கலைக்கழகம் மாணவியின் பாலியல் குற்றசாட்டுயில் இதுவரை கண்டுபிடிக்காமல் திமுக அரசு பல்வேறு காரணங்களை கூறி வருகிறது. இந்த நிலையில் பாலியல் குற்றவாளி யார் அந்த சாரை கண்டுபிடிக்க கோரி 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோகளில் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி யார் அந்த சார் என வாசகம் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டி திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது திருப்பத்தூர் நகர செயலாளர் டி. டி. குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலூர் மண்டல தலைவர் டாக்டர். நாகேந்திரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தம்பாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக தொண்டர்கள் உடன் இருந்தனர்.
Next Story