யோகா போட்டியில் அரசு பள்ளி மாணவன் முதலிடம்

தமிழ்நாடு ஸ்டேட் யோகா சாம்பியன்ஷிப் போட்டி 2025
3 ஆவது தமிழ்நாடு ஸ்டேட் யோகா சாம்பியன்ஷிப் 2025 போட்டி இன்று கரூர் பெரிய கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஸ்ரீ சங்கரா யோகா சென்டர் சார்பில் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தண்ணீர் பள்ளியில் அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வரும் ராகவன் பொது யோகா போட்டியில் சிறந்த முறையில் பங்கேற்று முதலிடம் பிடித்தார். அவருக்கு பள்ளி சார்பிலும், இராஜேந்திரம் கிராம மக்கள் சார்பிலும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Next Story