ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெறும் அவலத்தை கண்டித்தும் மருத்துவர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பு வலியுறுத்தி பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
Ariyalur King 24x7 |9 Jan 2025 2:04 PM GMT
ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெறும் அவலத்தை கண்டித்தும் மருத்துவர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயங்கொண்டம், ஜன.9- ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையின் அவலத்தை கண்டித்தும் மருத்துவர் உள்ளிட்ட அனைத்து காலி பணியிடங்களையும் உடனே நிரப்பிட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்போது 152 படுகைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது எனினும் இம்மருத்துவமனையில் மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு பிரிவு காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்மறவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் ஜெயங்கொண்டம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பல்வேறு நிலை பணிகளில் 251 பணியிடங்களில் 119 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது குறிப்பாக மருத்துவர்கள் மட்டும் 50 பணியமர்த்தப்பட வேண்டிய நிலையில் 18 மருத்துவ பணியாளர்கள் பணியிடங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது அதேபோல் 135 செவிலியர்கள் பணியாற்ற வேண்டிய மருத்துவமனையில் தற்போது 51 செவிலியர்கள் மற்றும் 77 துப்புரவு பணியாளர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் 34 துப்புரவு பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர் மேலும் இம்ம மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சை கண் காது மூக்கு தொண்டை உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் இல்லாததால் வேறு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய அவல நிலையும் உள்ளது மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட போதிலும் எவ்விதமான அடிப்படை வசதியோ மருத்துவர்கள் உள்ளிட்ட எந்தவித பணியிடங்களும் முழுமையாக நிரப்பப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர் எனவே மாவட்ட தலைமை மருத்துவமனையில் தேவையான அனைத்து பணியிடங்களையும் உருவாக்கி அதனை நிரப்பிட வேண்டும் மருத்துவமனை விரிவாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து அனைத்து உள்கட்ட அமைப்புகளுடன் மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர் ஆர்ப்பாட்டத்தில் மாநில மாணவர் சங்க செயலாளர் ஆளவந்தார், மாவட்டத் தலைவர் அசோகன் படைநிலை செந்தில் உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த ஏராளமானோ கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்ப வர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.முன்னதாக முன்னாள் நகர செயலாளர் மாதவன் தேவா வரவேற்று பேசினார் முடிவில் நகர செயலாளர் பரசுராமன் நன்றி கூறினார்.
Next Story