அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் உண்மை குற்றவாளியை தப்ப வைக்க இந்த அரசு முயற்சி செய்கிறது முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் உண்மை குற்றவாளியை தப்ப வைக்க இந்த அரசு முயற்சி செய்கிறது முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்
*அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் உண்மை குற்றவாளியை தப்ப வைக்க இந்த அரசு முயற்சி செய்கிறது முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பேட்டி
*அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் உண்மை குற்றவாளியை தப்ப வைக்க இந்த அரசு முயற்சி செய்கிறது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ANUT மண்டபத்தில் தேமுதிக மாவட்ட நிர்வாகி இல்ல திருமண விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பங்கேற்றார்.. இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், தமிழகம் முழுவதும் அண்ணா திமுகவிற்கு ஆதரவு அலை பெருகிக்கொண்டே இருக்கிறது என்பதற்கு அருப்புக்கோட்டையும் ஒரு சாட்சி. தற்போது சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது. இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அதிமுக எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திமுக அரசு திணறிக் கொண்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக தொண்டர் என ஆர் எஸ் பாரதி ஒரு புறம் கூறியுள்ளார். மற்றொருபுறம் ஞானசேகரன் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் அல்ல ஆதரவாளர் என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். ஒரே கட்சிக்குள் இரண்டு கருத்து நிலவுகிறது குற்றவாளியை தப்ப வைக்கும் முயற்சியில் இந்த அரசு ஈடுபட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட அந்த பெண்ணே சொல்லி இருக்கிறார் சார் சார் என ஞானசேகரன் போனில் பேசினார் என்று. யார் அந்த சார் என்ற குற்றவாளியை கண்டறிய வேண்டாமா.‌ ஞானசேகரன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது அவரை மட்டும் கைது செய்தால் போதுமா உண்மையான குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்பதுதான் அதிமுகவின் கோரிக்கையாக உள்ளது. நீதி கேட்கும் அதிமுகவின் பக்கம் தான் தமிழக மக்கள் இருக்கிறார்கள் என பேசினார். தமிழக சட்டப்பேரவையில் யூஜிசி விதிகளுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் கொண்டு வருகிறது அதை அதிமுக வரவேற்குமா இல்லை எதிர்க்கும் என செய்தியாளர்கள் கேட்டதற்கு யுஜிசி விதிகளில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது அதை அண்ணா திமுக ஆட்சியிலேயே பல கருத்துக்களை வேண்டாம் என்றும் சில கருத்துக்களை ஆதரித்தும் நாங்கள் பேசியிருக்கிறோம். இன்றும் அதே கருத்தை நாங்கள் கூறி வருகிறோம் என பேசினார். அருப்புக்கோட்டையில் அண்ணா திமுக இருந்தபோது அருப்புக்கோட்டை வளர்ச்சி பாதையை நோக்கி சென்றது.‌ குறுகிய காலத்தில் அரசு கலைக்கல்லூரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தரமான சாலைகள் என அனைத்தும் கொண்டுவரப்பட்டது.‌ தற்போது அருப்புக்கோட்டையில் ஒரு அமைச்சர் இருக்கிறார் அவர் எந்த வளர்ச்சி பணிகளையும் செய்யவில்லை. தன்னுடைய வளர்ச்சியும் தன்னுடைய குடும்பத்தின் வளர்ச்சியை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார் என அதிமுக குற்றம் சாட்டுகிறது என பேசினார் பொங்கல் பரிசு தொகுப்பு செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதிமுக ஆட்சிக்காலத்தில் 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது தற்போது ரூபாய் ஆயிரம் கூட வழங்க இந்த அரசுக்கு துப்பில்லை. மத்திய அரசின் மீது குற்றம் சாட்டுகிறார்கள்.‌ மாநில அரசை தேர்ந்தெடுத்தது மக்கள். மக்களுக்கு செய்யத் தவறிய இந்த திமுக அரசு தேவையா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது என பேசினார்.
Next Story