பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்.

பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்.
திருவாரூர் நகராட்சியுடன் பெருந்தாரக்குடி ஊராட்சியை இணைப்பதை கண்டித்து பெருந்தரக்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெருங்குடி ஊராட்சியை திருவாரூர் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெருங்குடி ஊராட்சி அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில், பெருங்குடி, கீழப்படுகை, தென்கரை வேலங்குடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் பங்கேற்றனர். விவசாயம் சார்ந்த பகுதியான பெருங்குடி ஊராட்சியை நகராட்சி உடன் இணைப்பதல் விவசாயத்தையும், விவசாயம் சார்ந்த கூலித் தொழிலையும் நம்பி இருக்கும் மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவர், 100 நாள் வேலைத் திட்டம், வீடு இல்லாத ஏழைகளுக்கு அரசின் இலவச வீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும், சலுகைகளும் பாதிக்கப்படும் என்பதால், திருவாரூர் நகராட்சியுடன் பெருங்குடி ஊராட்சியை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் ஐவி. நாகராஜன் பங்கேற்று, கோரிக்கையை விளக்கிப் பேசினார்.
Next Story