குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு
Dindigul King 24x7 |9 Jan 2025 2:45 PM GMT
6,85,629 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி, செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி, வேலுநாச்சியார் வளாக குடியிருப்பு நியாயவிலைக் கடையில் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் நியாய விலைக்கடைக்குச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்புகளைப் பெற்றுக்கொள்ளலாம். நியாய விலைக்கடைகளில் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்படவுள்ள தேதி, காலம், நேரம் குறிப்பிட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களும் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நாள் நேரத்தின்படி நியாய விலைக்கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்புகள் பெற்றுக்கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, துணைப்பதிவாளர்(பொதுவிநியோகத்திட்டம்) அன்புக்கரசன், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் ஜெயபிரகாசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Next Story