மாசில்லா திருவாரூர், புகையில்லா போகி” விழிப்புணர்வு பிரச்சாரம்..

மாசில்லா திருவாரூர், புகையில்லா போகி” விழிப்புணர்வு பிரச்சாரம்..
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் “மாசில்லா திருவாரூர், புகையில்லா போகி” விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில்; “மாசில்லா திருவாரூர், புகையில்லா போகி” விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளுக்கு முதல் நாள் போகிப்பண்டிக்கை கொண்டாடுகிறோம். பழையன கழிதல் என்பது இந்நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பங்கள், தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்துவது, பெரும்பாலும் நமது கிராமங்களில் கடைப்பிடிக்கப்படும் இப்பழக்கம் சுற்றுசூழலுக்கு பெரும் தீமையை ஏற்படுத்தாத ஒன்றாகும். தற்சமயம் போகியன்று மக்கள் டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கைப் பொருட்களையும் சேர்த்து எரிக்கையில் நச்சுப் புகைமூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல், நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் மற்றும் புற்றுநோய் உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே, பொங்கல் திருநாளை புகையில்லா பண்டிகையாக கொண்டாடிட பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்படவும் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை துவக்கி வைத்தார்.
Next Story