சட்ட விவாதமாக விற்கப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்!
Vellore King 24x7 |9 Jan 2025 3:16 PM GMT
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்றவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்கப்படும் போதைப்பொருள் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்வதோடு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு எஸ் பி உத்தரவிட்டிருந்தார். இதன்படி நாள்தோறும் போலீசார் தீவிர சோதனையை நடத்தி வரும் நிலையில் இன்று வேலூர் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 100 கிராம் கஞ்சா மற்றும் 25 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வேலூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
Next Story