தார்சாலை பணியினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Nagercoil King 24x7 |9 Jan 2025 3:47 PM GMT
குமரி
குமரி மாவட்டம் இறச்சகுளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மாநில நெடுஞ்சாலை துறையின் சார்பில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, இன்று (09.01.2025) ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- விரிவான சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2024-2025-ன் கீழ் ரூ.90 இலட்சம் மதிப்பில் இறச்சகுளம் முதல் துவரங்காடு வரை 1.6 கி.மீட்டர் நீளத்திலும், 7 மீட்டர் அகலத்தில் சாலையை விரிவாக்கி, தார்சாலை அமைக்கப்பட்டு வரும் பணியினை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, இத்தார்சாலையின் தரத்தினை ஆய்வு செய்யப்பட்டு, விளக்கம் கேட்டறியப்பட்டதோடு, சாலை தரமானதாக இருக்கவும், பணியினை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அரவிந்த், சாலை ஆய்வாளர் அருள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story