ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் மீன்சுருட்டி சாலை தரம் உயர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் மீன்சுருட்டி சாலை  தரம் உயர்த்த  மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை
ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் மீன்சுருட்டி சாலை தரம் உயர்த்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
அரியலூர், ஜன.9- ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் மீன்சுருட்டி சாலையை சீரமைக்க கோரி பல வருடங்களாக கோரிக்கை வைத்து வந்தனர் இந்நிலையில் கடந்த சில வருடங்களாக இந்த சாலையை மாநில நெடுஞ்சாலையாக மாற்றக் கோரியும் கோரிக்கை வைத்து அதிகாரிகளுக்கு அனுப்பியும் போராடியும் வந்தனர். இந்நிலையில் கடந்த 8-ந் தேதி அன்று மறியல் போராட்டம் செய்வதாக இருந்த நிலையில் போலீசார் இதற்கு அனுமதி மறுத்திருந்தனர். பொதுமக்கள் ஒன்று திரண்டு குண்டவெளி செல்லியம்மன் கோவிலில் திரண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் இவர்களிடம் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இதற்கான நடவடிக்கை விரைவில் எடுப்பதாக பொதுமக்களை கலைந்து செல்ல கூறியதன் பேரில் கலைந்து சென்றனர். இந்த தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் கடந்த மாதம் .2024 டிசம்பர் 19ஆம் தேதி அன்று இதற்கான கோப்புகளை எடுத்து ஊரக வளர்ச்சி முகமை இயக்குனருக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது இந்த சாலையை மாற்றுவதற்கான கோப்புகளை ஊரக வளர்ச்சி முகமை செயலருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் ஊரக வளர்ச்சி முகமயிலிருந்து நெடுஞ்சாலை துறை செயலருக்கு கோப்புகளை அனுப்பி வைத்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.
Next Story