ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து

ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து
குமாரபாளையம் சிவசக்தி நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்து
கோயமுத்தூர் தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அணில் என்பவரின் குடும்பத்தினர், பவானியில் நடைபெற்ற துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்துவிட்டு, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியான எதிர் மேடு பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் உணவருந்துவதற்காக சென்று உணவருந்தி விட்டு, மூன்று கார்கள் மூலம் மீண்டும் கோவைக்கு திரும்பினர் அப்பொழுது அணில் குடும்பத்தினர் வந்த கார் குமாரபாளையம் சிவசக்தி நகர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, இரண்டு லாரிகளை முந்துவதற்காக ஓட்டுநர் முயற்சி செய்த பொழுது கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியது. விபத்தில் சிக்கிய கார் உருண்டபடி சர்வீஸ் சாலையில் உள்ள பள்ளத்தில் வந்து நின்றது. இந்த காட்சி அருகில் இருந்த சூர்யா கார் விற்பனையகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியது. மேலும் இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இருப்பினும் காரில் பயணம் செய்த அணில் குடும்பத்தினருக்கு லேசான காய்கள் மட்டுமே ஏற்பட்டதால், முதல் உதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மேலும் இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த அந்த காட்சிகள் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Next Story