பொய்யாமணி ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

திமுக குளித்தலை மேற்கு ஒன்றிய செயலாளர் தியாகராஜன் தொடங்கி வைத்தார்
கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் பொய்யாமணி ஊராட்சிக்கு உட்பட்ட பங்களாபுதூர் நியாய விலை கடையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக குளித்தலை மேற்கு ஒன்றிய செயலாளர் தியாகராஜன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன், செந்தில் ராமசாமி மற்றும் திமுக மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story