கையில் கரும்புடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கரும்புகளை ஏந்தியபடி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டு கடை அருகே தமிழ்நாடு கரும்பு சேவை சங்கம் மற்றும் ஆலை தொழிலாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று (ஜன.9) நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் என்.பழனிச்சாமி தலைமை வகித்தார். கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கரு.கதிரேசன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மதுரை மாவட்ட செயலாளர் எஸ்.பி. இளங்கோவன் துவக்கி வைத்து பேசினார். கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் மாவட்ட பொருளாளர் வி.அடக்கிவீரணன், விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் ஏ.ராஜேஸ்வரன், கரும்பு விவசாயிகள் சங்கத் துணைத் தலைவர் பி.எஸ்.ராஜாமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் கே.தவமணி, கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கே.மொக்கமாயன், . அரிட்டாபட்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் முருகன், கோட்டநத்தம்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் மு. கந்தப்பன், மணிவேல், ஏ.போஸ், எம்.நாகராஜன், உட்பட நூற்றுக்கு மேற்பட்ட கரும்பு விவசாயிகள் பெண்கள் ஆகியோர் கரும்புகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Next Story