ஆரணி ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு பொருட்களை ஆரணி எம்.பி வழங்கி துவக்கி வைத்தார.
Arani King 24x7 |10 Jan 2025 1:21 AM GMT
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அண்ணா சிலை அருகில் வைகை கூட்டுறவு சங்கம் கடையில்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அண்ணா சிலை அருகில் வைகை கூட்டுறவு சங்கம் கடையில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு பொருட்களை வியாழக்கிழமை ஆரணி எம்.பி வழங்கி துவக்கி வைத்தார். பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆரணி கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஆரணி எம்.பி.தரணிவேந்தன் பங்கேற்று 134 கடைகளில் பச்சரிசி, கரும்பு, பொங்கல் தொகுப்பு பொருடகள் 85ஆயிரத்து 160 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கான நிகழ்வில் பயனாளிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார். இதில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம், நகர மன்ற தலைவர் ஏ.சி மணி, தொகுதி செயலாளர் எஸ்.எஸ்.அன்பழகன், கூட்டுறவு பண்டகசாலை செயலர் கல்யாணகுமார், மாவட்டதுணைசெயலாளர் ஜெயராணிரவி, ஒன்றிய செயலாளர்கள் துரை.மாமது, சுந்தர், மோகன், வட்டாட்சியர் கௌரி, வட்ட வழங்க அலுவலர் மூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் ஆரணி பெரியகடைவீதி, பிள்ளையரர் கோயில் தெருவில் உள்ள ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார்.
Next Story