இருசக்கர வாகனம் திருடிய ஐந்து பேர் கைது

பாலக்கோட்டில் இரு சக்கர வாகனம் திருடிய சிறுவர்கள் உட்பட ஐந்து பேரை பாலக்கோடு காவலர்கள் கைது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பாலக்கோடு கம்மாளர் தெருவில் வசித்து வரும் பாலாஜி லாரி ஓட்டுநர் இவரது இருசக்கர வாகனம் நேற்று முன்தினம் இரவு வீட்டில் முன்பு நிறுத்திவிட்டு நேற்று ஜனவரி 9 காலை பார்த்த போது இரு சக்கர வாகனம் திருடப்பட்டிருந்தது பல்வேறு இடங்களில் தேடிய பாலாஜி பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவலர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை செய்த போது தீனதயாளன், ஆனந்தன் மற்றும் 18 வயது கொண்ட சிறுவன் 17 வயது 2 சிறுவர்கள் என ஐந்து பேர் கூட்டாக சேர்ந்து இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது இதனை அடுத்து ஐந்து பேரையும் காவலர்கள் நேற்று பிற்பகல் கைது செய்தனர். பின்னர் தீனதயாளன் மற்றும் ஆனந்த் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர். சிறுவர்களை சேலம் கூர் நோக்கு இல்லத்தில் காவலர்கள் ஒப்படைத்தனர்
Next Story