வார சந்தையில் ஒன்றரை கோடிக்கு ஆடுகள் விற்பனை

வார சந்தையில் ஒன்றரை கோடிக்கு ஆடுகள் விற்பனை
பொம்மிடி அருகே வடசந்தையூர் வார சந்தையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஒன்றரை கோடிக்கு ஆடுகள் விற்பனை
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொம்மிடி அருகே உள்ள வடசந்தையூர் பகுதியில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை நாட்களில் கால்நடைகள் விற்பனைக்காக சிறப்பு வார சந்தை நடைபெறும் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற இந்த சந்தைக்கு பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும் தருமபுரி மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்வது வழக்கம் இந்த நிலையில் நேற்று ஜனவரி 09 நடைபெற்ற வார சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். மேலும் பொங்கல் பண்டிகைக்கு ஒரு சில தினங்களே உள்ள நிலையில் ஆடுகள் விற்பனை கலை கட்டியது சிறிய அளவிலான ஆடுகள் 8000 ரூபாய்க்கு துவங்கி பெரிய அளவிலான ஆடுகள் 25000 ரூபாயில் வரை விற்பனையானது மேலும் நேற்று ஒரே நாளில் 1.50 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story