சாலையோர வியாபாரிகளுக்கு காவல் துறை அனுமதி வழங்க வேண்டும்
Thoothukudi King 24x7 |10 Jan 2025 2:42 AM GMT
பொங்கல் பண்டிகை முன்னிட்டு சாலையோர வியாபாரிகளுக்கு காவல் துறை அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு சாலையோர வியாபாரிகளுக்கு காவல் துறை அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் க. தமிழரசன், மாவட்டப் பொருளாளா் எஸ். ஆா். பாஸ்கரன், நகரத் தலைவா் மாரிமுத்து குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் காவல் துணை கண்காணிப்பாளா் ஜெகநாதனிடம் கோரிக்கை மனு அளித்தனா். மனு விவரம்: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு, மஞ்சள் குலை, பனங் கிழங்கு போன்றவற்றை வியாபாரிகள், விவசாயிகள் சாலை ஓரங்களில் வைத்து விற்பனை செய்வது வழக்கம். இந்த நிலையில், தற்போது கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனைடுத்து சாலை ஓரங்களில் பண்டிகை பொருள்கள் விற்பனை செய்ய காவல் துறையினா் அனுமதி மறுத்து வருகின்றனா். வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பொங்கல் பண்டிகைக்காக சாலை ஓரக் கடைகளை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.
Next Story