பிஎஸ்என்எல் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

பிஎஸ்என்எல் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
தூத்துக்குடி பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி பிஎஸ்என்எல் மனமகிழ் மன்றத்தின் சாா்பாக நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, மன்றத் தலைவரும் பிஎஸ்என்எல் பொதுமேலாளருமான எஸ். கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். துணைப் பொது மேலாளா்கள் எஸ். சாந்தி, டி.ஆறுமுகசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பிஎஸ்என்எல் அலுவலா்களுடன் பொங்கலிடப்பட்டு, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில், மன்ற துணைத்தலைவா் லிங்கபாஸ்கா், செயலா் ரமேஷ், பொருளாளா் ராமசாமி உள்பட அதிகாரிகள், ஊழியா்கள் பங்கேற்றனா்.
Next Story