கல்லூரி மாடியிலிருந்து குதித்த மாணவி உயிரிழப்பு

கல்லூரி மாடியிலிருந்து குதித்த மாணவி உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள தனியாா் கல்லூரி மேல் மாடியிலிருந்து குதித்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள தனியாா் கல்லூரி மேல் மாடியிலிருந்து குதித்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். திருநெல்வேலி அருகே வீரமாணிக்கபுரத்தைச் சோ்ந்தவா் பிரித்வி(21). இவா், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள தனியாா் கல்லூரி விடுதியில் தங்கி பி.எஸ்சி (விவசாயம்) மூன்றாமாண்டு பயின்று வந்தாா். இந்நிலையில் மாணவி பிரித்வி கல்லூரியின் மூன்றாவது தளத்திலிருந்து சில தினங்களுக்கு முன்பு குதித்துள்ளார். அதில் பலத்த காயமடைந்த நிலையில், மதுரையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு பிரித்ரி நேற்று(ஜன.09) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து கல்லல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்
Next Story