நெல் அறுவடை இயந்திரங்கள் தனியாரிடம் வாடகை அதிகரிப்பால் விவசாயிகள் வேதனை

நெல் அறுவடை இயந்திரங்கள் தனியாரிடம் வாடகை அதிகரிப்பால் விவசாயிகள் வேதனை
சிவகங்கை மாவட்டம், வேளாண் பொறியியல் கூட்டுறவுத் துறை செயலியில் நெல் அறுவடை இயந்திரங்கள் இல்லாத நிலையில், தனியாரிடம் அதிக வாடகை வழங்க வேண்டியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் பல பகுதிகளில் அறுவடைப் பணி தொடங்கியது. கடந்த சில ஆண்டுகளாக கூலி ஆட்கள் கிடைக் காததால். இயந்திரங்கள் மூலமே நெல் அறுவடை செய்யப்படுகிறது. டயர் இயந்திரம், 4 வீல் மூவிங் இயந்திரம், செயின் இயந்திரம் என 3 வகையான நெல் அறுவடை இயந்திரங்கள் உள்ளன. இதில் டயர் இயந்திரம் மட்டுமே அரசு மூலம் வாடகைக்கு விடப்படுகிறது. ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,160 வசூலிக்கப்படுகிறது. இயந்திரங்களை வாடகைக்கு எடுக்க விரும்புவோர் வேளாண்மை மூலம் பதிவு செய்யலாம். ஆனால், இந்த 2 செயலியிலும் அறுவடை இயந்திரங்கள் இல்லை. இதனால் விவசாயிகள் தனியாரை நாடுகின்றனர். இதைப் பயன்படுத்தி தனியார் வாடகையை அதிகரித்துள்ளனர். இதனால் விவ சாயிகள் வேதனையில் உள்ளனர். இதுகுறித்து விவசாயிள் கூறும்போது அரசிடம் இயந்திரங்கள் இல்லாததால் விவசாயிகள் தனியாரை நாடும்போது. அவர்கள் ஒரு மணி நேரத்துக்கு டயர் இயந்திரத்துக்கு ரூ.2,000, 4 வீல் மூவிங் இயந்திரத்துக்கு ரூ.2,200, செயின் இயந்திரத்துக்கு ரூ.3,000 வசூலிக்கின்றனர். இந்த வருடம் பல இடங்களில் விளைநிலங்களில் மழைநீர் வடியாமல் உள்ளது. இதனால் செயின் இயந்திரத்தை மட்டுமே பயன்படுத்த முடியும். அந்த இயந்திரம் ஓர் ஏக்கரில் நெற் கதிரை 1.15 மணி நேரம் அறுவடை செய்யும். இதனால் ரூ.3,750 செலவாகிறது. மழையால் ஏக்கருக்கு 1,000 கிலோ நெல் கிடைப்பதே சிரமம். இதனால் விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்படுகிறது. குறைந்த விலையில் அறுவடை இயந்திரங்களை வாடகைக்குவிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகள் கூறுப்போது மாவட்டத்தில் ஒரே ஓர் இயந்திரம் மட்டுமே உள்ளது. அது காரைக்குடிப் பகுதியில் அறுவடைக்கு அனுப்பப் பட்டுள்ளது. செயலியில் இயந்திர விவரம் இல்லாவிட்டால், நேரடியாக உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தில் மனு கொடுக்கலாம் என்றனர்.
Next Story