கரூர் மேட்டு தெரு பகுதியில் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
Karur King 24x7 |10 Jan 2025 3:30 AM GMT
கரூர் மேட்டு தெரு பகுதியில் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் மேட்டு தெரு பகுதியில் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாநகரில் அமரவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அபய பிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோயில். நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து நிகழ்ச்சி கடந்த 31-ஆம் தேதி துவங்கியது. அதனை தொடர்ந்து நாள்தோறும் சுவாமி அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அதிகாலை 4.30 மணியளவில் திறக்கப்பட்டது. பக்தர்களின் கோவிந்தா ,கோவிந்தா முழக்கத்துடன் திறக்கப்பட்ட சொர்க்கவாசல் வழியாக ரெங்கநாத சுவாமி எழுந்தருளினார். அதனை தொடர்ந்து கோயில் முன்புறமுள்ள மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து அருளாசி வழங்கினார் இதனை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிக பக்தர்கள் ஆலயம் வருகை ஒட்டி போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
Next Story