அண்ணா சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

அண்ணா சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
பள்ளி தாளாளர் பாராட்டி பரிசு வழங்கினார்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி சேலத்தில் மாவட்ட அளவில் அண்ணா சைக்கிள் போட்டி நடந்தது. இந்த போட்டியில் சேலம் சின்னதிருப்பதி ஜெய்ராம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றனர். அதாவது, 15 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 9-ம் வகுப்பு மாணவன் ஸ்ரீகுமரன் முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், சைலேஸ் 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும் பெற்றனர். 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 10-ம் வகுப்பு மாணவன் சுதர்சன் 2-ம் பரிசும், 11-ம் வகுப்பு மாணவன் விக்னேஸ்வரன் 4-ம் பரிசும், ஸ்ரீகரன் 7-ம் பரிசும் பெற்றனர். சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை ஜெய்ராம் கல்வி நிறுவன தலைவர் ராஜேந்திரபிரசாத், தாளாளர் மணிகண்டன், தினேஷ், பள்ளி முதல்வர் செல்வராசு, பள்ளி ஒருங்கிணைப்பாளர் உமாமகேஸ்வரி, உடற்கல்வி ஆசிரியர் மாணிக்கவாசகம் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.
Next Story