ராமநாதபுரம் மாணவிகளிடம் ஆபாச பேச்சு அரசு பள்ளி ஆசிரியர் பணியிட மாற்றம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆங்கில பாடம் எடுக்கும் முதுகலை ஆசிரியர் சரவணன். இவர் மாணவிகளிடம் இரட்டை அர்த்தம் கலந்து ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பாலியல் ரீதியில் பேசி வருவதாக மாணவிகளின் பெற்றோர் தலைமையாசிரியரிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் நேற்று முன்தினம் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சின்னராசு உள்ளிட்ட கல்வித்துறை அலுவலர்கள் மாணவிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக ஆசிரியர் சரவணன் விடுப்பில் சென்றார். இந்நிலையில் ஆசிரியர் சரவணனை, திருவாடானை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் நேற்று உத்தரவிட்டார். மேலும் ஆசிரியர் சரவணன் மீது தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story



