சாலை விபத்தில் சிக்கிய வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
Villuppuram King 24x7 |10 Jan 2025 4:05 AM GMT
விபத்தில் சிக்கிய வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
திருவெண்ணெய்நல்லூர் அடுத்த டி. எடப்பாளை யத்தை சேர்ந்தவர் அன்வர் மகன் கலீல்,34; இவரும், அதேபகுதியை சேர்ந்த உறவினர்கள் நசீர் அஹமத், அபூபக்கர் ஆகிய மூவரும் கடந்த 26ம் தேதி டாட்டா ஏஸ் வேனில், வீட்டிற்கு சென்றபோது, திருவெண்ணெய்நல்லூர் ஏரிக்கரை அருகே எதிரே கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மோதியது. அதில், வேன் மற்றும் டிராக்டர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.விபத்தில் படுகாயமடைந்த கலில், நசீர் அகமத், அபுபக்கர் மற்றும் டிராக்டர் டிரைவர் ஆகிய 4 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆபத்தான நிலையில் இருந்த கலீல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார்.திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story