குமரி : ஆதி திராவிடர்களுக்கு தொழில் பயிற்சி
Nagercoil King 24x7 |10 Jan 2025 4:07 AM GMT
நாகர்கோவில்
குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. தொழில்நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சியில் சேர்ந்து பயில பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி, தொழிற்பயிற்சி (ITI), பட்டயபடிப்பு (Diploma) மற்றும் ஏதேனும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சி முடித்த உடன் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேர்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com மூலம் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கன்னியாகுமரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Next Story