விழுப்புரம் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

விழுப்புரம் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்
காணை வட்டார வளமையத்தில் நடந்த முகாமிற்கு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆரோக்கிய அனிதா தலைமை தாங்கினார்.காணை ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி முகாமை துவக்கி வைத்தார்.உதவி திட்ட அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாக்கியலட்சுமி, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோதை, வட்டார கல்வி அலுவலர்கள் மத்தேயு, புஷ்பராணி வாழ்த்துரை வழங்கினர்.வட்டார ஒருங்கிணைப் பாளர் இவாஞ்சலின்கவிதா, ஆசிரிய பயிற்றுனர்கள் அனிதா, சுபாஷ் கெஜலட்சுமி, எழிலரசி, லியோனி, விஜயலட்சுமி, சரண்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முகாமில், மாற்றுத் திறனாளி மாணவர்களை பரிசோதித்து தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்களுக்கான பரிந்துரைகளை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ குழுவினர் வழங்கினர்.இயன்முறை மருத்துவர் சவுந்தரராஜன் நன்றி கூறினார்.
Next Story